கடந்த ஆண்டு வெளியாகி நல்ல விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது பீல்குட் படமான குட்னைட். பெரிய ஆர்ப்பாட்டம் இல்லாமல் ரிலீஸான இந்த படம் பலரது பாராட்டுகளையும் குவித்தது. இந்த படத்தில் ஜெய்பீம் புகழ் மணிகண்டன், ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்த படத்தை இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கி இருந்தார்.
இந்த படத்தின் வெற்றியால் கவனிக்கப்படும் இயக்குனரானார் விநாயக் சந்திரசேகர். இந்நிலையில் இவர் இப்போது தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் இறங்கியுள்ளார். அவர் தன்னுடைய அடுத்த படத்தில் சிவகார்த்திகேயனை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தனுஷ் குட்னைட் படம் பார்த்து இயக்குனர் விநாயக்கை பாரட்டியதாகவும், தனக்கு ஏற்றார் போல கதை எதாவது இருந்தால் அதில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் அவரிடம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.