Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அட்லி இயக்கி வரும் விஜய்யின் மெர்சல் படத்தில் ஜி.வி.பிரகாஷ்

அட்லி இயக்கி வரும் விஜய்யின் மெர்சல் படத்தில் ஜி.வி.பிரகாஷ்
, திங்கள், 26 ஜூன் 2017 (12:36 IST)
விஜய் நடிப்பில் அட்லி இயக்கி வரும் படம் ‘மெர்சல்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். விஜய், அட்லீயின் மெர்சல் பட தகவல்கள் நாளுக்கு நாள் வந்து கொண்டே இருக்கிறது.

 
நீண்ட வருடங்களுக்கு பிறகு ஏ.ஆர். ரகுமான் இசையமைப்பில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடல் பாடியிருக்கிறாராம். இந்நிலையில்  ஜி.வி. பிரகாஷ். என்னுடைய ஃபேவரெட் ஏ.ஆர். ரகுமான் இசையில் விஜய் அண்ணா நடித்திருக்கும் மெர்சல் படத்தில் ஒரு  பாடல் பாடுவது மகிழ்ச்சி என்று தன்னுடைய டுவிட்டரில் ஜி.வி. பிரகாஷ் பதிவிட்டுள்ளார்.
 
ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் ஆடியோவை வெளியிடவுள்ளனர். ஸ்ரீதேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம் தனது 100-வது  படமாக இப்படத்தை தயாரித்து வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ் கஜோல் மோதல்; விஐபி 2 வைரலாகும் பாடல் மேக்கிங் வீடியோ