Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எழுந்து நடமாட தொடங்கிவிட்ட யாஷிகா: புகைப்படம் வைரல்!

Advertiesment
எழுந்து நடமாட தொடங்கிவிட்ட யாஷிகா: புகைப்படம் வைரல்!
, ஞாயிறு, 26 செப்டம்பர் 2021 (11:51 IST)
எழுந்து நடமாட தொடங்கிவிட்ட யாஷிகா: புகைப்படம் வைரல்!
நடிகை யாஷிகா ஆனந்த் சமீபத்தில் நடந்த கார் விபத்து ஒன்றில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் அவருக்கு கால் எலும்பு, இடுப்பு இடுப்பு எலும்பு உட்பட பல எலும்புகள் முறிவு அடைந்ததாகவும் அவருக்கு ஒரு சில அறுவை சிகிச்சைகளும் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின
 
மேலும் அவர் எழுந்து நடமாடுவதற்கு குறைந்தபட்சம் 3 மாதங்கள் வரை ஆகும் என்றும் மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்பட்டது. மேலும் இந்த விபத்தில் அவருடைய நெருங்கிய தோழி பவானி என்பவர் பலியானது அவருக்கு மனதளவில் மிகப்பெரிய சோகத்தை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடிகை யாஷிகா ஆனந்த் காயத்திலிருந்து மீண்டு வருகிறார். தற்போது அவர் எழுந்து நடமாடும் நிலைக்கு வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் அசோக் என்பவர் நடிகை யாஷிகா ஆனந்த் நேரில் சந்தித்து நலம் விசாரித்துக் கொண்டார். இந்த இதுகுறித்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சினிமா குறித்த புத்தகங்கள் தமிழில் குறைவு: வெற்றி மாறன் வேதனை!