Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

திருமணத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது.. ஆனால்? –அனுஷ்கா கருத்து!

Advertiesment
நவின் பொலிஷிட்டி
, புதன், 6 செப்டம்பர் 2023 (07:23 IST)
தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.

கடைசியாக அவர் நடிப்பில் பாகுபலி, இஞ்சி இடுப்பழகி மற்றும் நிசப்தம் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸாகின. அதன் பிறகு தமிழ் படங்களில் அவர் தலைகாட்டவே இல்லை. இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கில் “மிஸ் ஷெட்டி மற்றும் மிஸ்டர் பொலிஷெட்டி’ என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் பற்றி பேசியுள்ள அனுஷ்கா “இதில் அவந்திகா என்ற முற்போக்கு பெண்ணாக நடித்துள்ளேன். சோதனைக் குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெண்ணாக நடித்துள்ளேன். எனக்கு திருமணத்தின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் அது இயல்பாக நடக்கவேண்டும் என விரும்புகிறேன். கட்டாயப்படுத்தி நடக்கக் கூடாது” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

100 ஏழை, எளிய குழந்தைகளின் அறுவைச் சிகிச்சைக்கு சன்பிக்சர்ஸ் நிதியுதவி