Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

போஸ்டரைப் பார்த்து எல்லை மீறிய ரசிகர்களின் கமெண்ட்ஸ்… ப்ரமோஷனுக்கு ஆப்செண்ட் ஆன அனுபமா!

போஸ்டரைப் பார்த்து எல்லை மீறிய ரசிகர்களின் கமெண்ட்ஸ்… ப்ரமோஷனுக்கு ஆப்செண்ட் ஆன அனுபமா!

vinoth

, வெள்ளி, 29 மார்ச் 2024 (13:10 IST)
2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் அந்த நடிகை. அந்த படத்தின் அபரிமிதமான வெற்றியால் மூன்று நாயகிகளுமே பிரபலமானார்கள். அதில் ஒருவரான அனுபமா பரமேஸ்வரன் தமிழில் கொடி படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஆனால் தமிழில் பெரியளவில் வாய்ப்புகள் வரவில்லை. மாறாக தெலுங்கு சினிமா உலகம் அவரை வாரி எடுத்துக்கொண்டது. அங்கு பல வெற்றிப்படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த கார்த்திகேயா 2 திரைப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

இப்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், டில்லு ஸ்கொயர் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் டிரைலரில் படத்தின் கதாநாயகன் சித்துவோடு படு ரொமாண்டிக்கான காட்சிகளிலும் முத்தக் காட்சிகளிலும் நடித்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான போஸ்டர் ஒன்றில் அனுபமாவின் கைகள் சித்துவின் இடுப்புக்கு கீழே இருப்பது போல இருந்தது.

இதையடுத்து ரசிகர்கள் ஆபாசமாகக் கமெண்ட்களை அள்ளித் தெளிக்க படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதை அனுபமா தவிர்த்து வருகிறாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இளையராஜா பயோபிக் படத்துக்கு இவர்தான் திரைக்கதை எழுதுகிறாரா?