Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குழந்தையின் பெயரை அறிவித்த ஆலியா பட்- ரன்பீர் கபூர் தம்பதிகள்!

Advertiesment
குழந்தையின் பெயரை அறிவித்த ஆலியா பட்- ரன்பீர் கபூர் தம்பதிகள்!
, வெள்ளி, 25 நவம்பர் 2022 (09:21 IST)
இந்தி நடிகை ஆலியா பட்டிற்கும், ரன்பீர் கபூருக்கும் திருமணமான நிலையில் அவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது.

இந்தியில் 2 ஸ்டேட்ஸ், கல்லி பாய், பிரம்மாஸ்திரா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆல்யா பட். இவர் இந்தி தயாரிப்பாளர் மகேஷ் பட்டின் மகள். இவரும் இந்தி நடிகர் ரன்பீர் கபூரும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் இவர்களது திருமணம் நடந்தது.

பின்னர் சில மாதங்களில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஆல்யா பட் தெரிவித்தார், சமீபத்தில்தான் ஆல்யா பட்டின் வளைகாப்பு சிம்பிளாக நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று பிரசவத்திற்காக மருத்துவமனையில் ஆல்யா பட் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து இப்போது குழந்தைக்கு – ராஹா என்ற பெயரை தம்பதிகள் சூட்டியுள்ளனர். இதை சமூகவலைதளம் மூலமாக ஆலியா பட் அறிவித்துள்ளார்.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காயத்துக்கு பிறகு நடக்க முடியாமல் நடக்கும் பூஜா ஹெக்டே!