Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகை ஆத்மிகாவின் தந்தை மாரடைப்பால் மரணம் - கண்ணீர் பதிவு!

Advertiesment
நடிகை ஆத்மிகாவின் தந்தை மாரடைப்பால் மரணம்  - கண்ணீர் பதிவு!
, வெள்ளி, 3 ஜூலை 2020 (08:55 IST)
ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படம் மூலம் நடிகை ஆத்மிகா திரையுலகில் அறிமுகமானார். அவரின் முதல் படமே சூப்பர் ஹிட்டானதை தொடர்ந்து, துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் நரகாசூரன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதைத்தொடர்ந்து வைபவ் நடிப்பில் உருவாகும் காட்டேரி படத்திலும் ஆத்மிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். பெரிதாக வாய்ப்பு கிடைத்து மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்க மாஸ்டர் பிளான் போட்ட ஆத்மிகா உடல் எடையை குறைத்து வித விதமான போட்டோ ஷூட் எடுத்து ரசிகர்களின் பார்வையிலே இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது வாழ்க்கையில் எதிர்பாராத துயரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. ஆம், கடந்த ஜூன் 26ஆம் தேதி தனது தந்தையை இழந்துவிட்டதாக நடிகை ஆத்மீகா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மாரடைப்பால் இருந்த தந்தை குறித்து உருக்கமான பதிவு போட்டுள்ள அவருக்கு ரசிகர்கள், நண்பர்கள் என அனைவரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

❤️

A post shared by aathmika


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பாடகி சுசித்ராவிடம் ரூ.2 கோடி பேரம் பேசியது யார்? திடுக்கிடும் தகவல்