Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்று சூர்யா; இன்று சிவக்குமார் –கோபத்தை அடக்குங்கள் நடிகர்களே!

அன்று சூர்யா; இன்று சிவக்குமார் –கோபத்தை அடக்குங்கள் நடிகர்களே!
, திங்கள், 29 அக்டோபர் 2018 (17:10 IST)
சினிமா பிரபலங்கள் பொது இடங்களில் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகளவில் நடந்து வருகின்றன.

நடிகர் சிவக்குமார் இன்று சென்னையில் நடைபெற்ற ஒரு கடைதிறப்பு விழாவில் பங்கேற்க வந்திருந்த போது தன்னோடு செல்ஃபி எடுக்க முயன்ற இளைஞன் ஒருவனின் செல்போனை தட்டி விட்டது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளது.

பிரபலங்கள் இதுபோல பொதுவெளியில் நடந்து கொள்வது சமூக வலைதளங்களில் உடனே வைரலாகி விடுகிறது. என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களதானே?. அவர்களுக்கும் கோபம், எரிச்சல் போன்ற உணர்ச்சிகள உண்டுதானே?. பொதுமக்களும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடுதல், செல்ஃபி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் பிரபலங்கள் அனைவரும் நாம் திரையில் பார்ப்பது போல எந்நேரமும் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது.
webdunia

சிவக்குமார் விஷயம் இன்று வைரலாகிக் கொண்டிருக்க இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரது மகன் நடிகர் சூர்யா இதே போல ஒரு சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது. சென்னை அண்ணாசாலையில் உள்ள் ஒரு மேம்பாலத்தில் ஒரு விலையுயர்ந்த கார், ஒரு இளைஞனின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதி சிறு விபத்தானது. அவர்கள் இருவரும் அது சம்மந்தமாக பேசி சமாதானம் செய்துகொண்டிருக்கும் போது அந்த வழியாக காரில் சென்ற நடிகர் சூர்யா அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை என தவறாகப் புரிந்து கொண்டு எதுவும் விசாரிக்கமல் அந்த இளைஞனை அறைந்து விட்டார். பின்பு விஷயம் தெரிந்ததும் அந்த இடத்தை விட்டு வேகமாகக் கிளம்பி சென்றார்.

இதன் பின்னால் அந்த இளைஞர் சூர்யா மீது போலிசில் புகார் கொடுத்து பின்பு அதை திரும்பப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நம்பி நாராயணன் கதையில் நடிக்கும் மாதவன்