Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Monday, 7 April 2025
webdunia

நம்பி நாராயணன் கதையில் நடிக்கும் மாதவன்

Advertiesment
Actor Mdhavan Nmabi Narayanan Storey Actor Madhavn Next Film
, திங்கள், 29 அக்டோபர் 2018 (16:51 IST)
நீண்ட இடைவெளிக்கு பிறகு  2016-ம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. இதைத்தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் மாதவன் நடித்த விக்ரம் வேதா படமும் பெரிய ப்ளாக் பஸ்டர் வெற்றியை கொடுத்தது. 
 
இந்நிலையில் தற்போது மாதவன் அறிவியல் விஞ்ஞானியாக ஒரு படத்தில் நடித்திருக்கிறார். அது கேரளாவைச் சேர்ந்த நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது , இஸ்ரோவில் அறிவியல் விஞ்ஞானியாக பணி புரிந்தவர் இவர், 1994-ல் இவர் வேறு நாட்டிற்கு தகவல் கொடுக்கும் ஒரு உளவாளி என குற்றம் சாட்டப்பட்டு பிறகு  சிறையில் அடைக்கப்பட்டார். 
 
1996-ல் இந்த வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றப்பட்டது. கடைசியாக 1998-ல் வந்த தீர்ப்பின் படி இவர் எந்த ஒரு குற்றமும் செய்யவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து, நம்பியை விடுதலை செய்த நீதிமன்றம், அதில் வெற்றி பெற்ற அவருக்கு 50 லட்சம் நஷ்ட ஈடும் வழங்கப்பட்டது. 
 
தனக்கு நடந்த சம்பவங்களை  'ரெடி டூ பையர்:  How India and I survived the ISRO spy case' என புத்தகமாகவும்  எழுதியுள்ளார் நம்பி. பின்னாளில் இந்த சர்ச்சைக்குரிய கதையை படமாக்க இயக்குநர் ஆனந்த் மகாதேவன் விருப்பம் தெரிவித்தார், அதற்கு நம்பியும் ஒப்புக் கொள்ள.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகும் இந்தப்படத்தில் நம்பி நாராயணனின் கதாபாத்திரத்தில் நடிகர் மாதவன் நடிக்கிறார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'மீடூ' வை பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது : நடிகை ஜனனி பேட்டி!