முதல்வரை நேரில் சந்தித்து ஆசி பெற்ற நடிகர் யோகிபாபு

Webdunia
திங்கள், 4 செப்டம்பர் 2023 (20:14 IST)
நடிகர் யோகிபாபு, இன்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர் யோகிபாபு. இவர், கடந்த 2009 ம் ஆண்டு வெளியான யோகி என்ற படத்தின் மூலம் சினிமாவின் அறிமுகமானார்.

அதன்பின்னர், பையா, வேலாயுதம், ராஜபாட்டை, அட்டகத்தி, அரண்மனை, வேதாளம், பரியேறும் பெருமாள், கொரில்லா போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து காமேடி  செய்து அசத்தினார்.

அதன்பின்னர் ,கூர்கா, மண்டேலா, ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். சமீபத்தில், ரஜியுடன் இணைந்து ஜெயிலர், விஜயுடன் பீஸ்ட், சிவகார்த்திகேயனுடன் மாவீரன் ஆகிய படங்களில் காமெடி வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுடன் இணைந்து ஜவான் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது.

சினிமாவில் மட்டுமின்றி கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட யோகிபாபு, ஷூட்டிங்கின் போது இடைவேளையில் கிரிக்கெட் விளையாடுவது வாடிக்கை. அதேபோல் கோயில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்.

இந்த நிலையில், நடிகர் யோகிபாபு, இன்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியை நேரில் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.

இதுகுறித்த புகைப்படம் இன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திருமணம் செய்ய வேண்டாம் என பேத்திக்கு அறிவுரை கூறுவேன்: அமிதாப் மனைவி ஜெயா பச்சன்..!

உண்மை தெரிந்திருந்தால் மோகன் ஜி படத்தில் பாடியிருக்க மாட்டேன்: பாடகி சின்மயி

சமந்தா திருமணம் யோக விஞ்ஞானத்தின் அடிப்படையில் நடந்தது ஏன்? பரபரப்பு தகவல்..!

திருமண புகைப்படங்களை வெளியிட்ட சமந்தா.. குவியும் வாழ்த்துக்கள்

வாழவைத்த தமிழ் சினிமா! விருது வாங்கிய ரஜினிக்கு கோலிவுட் கொடுத்த கிஃப்ட்

அடுத்த கட்டுரையில்
Show comments