Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவசாயிகள் போராட்டத்துக்கு சுத்தி வளச்சு ஆதரவு தெரிவித்த விவேக் – நெட்டிசன்கள் கேள்வி!

Advertiesment
விவசாயிகள் போராட்டத்துக்கு சுத்தி வளச்சு ஆதரவு தெரிவித்த விவேக் – நெட்டிசன்கள் கேள்வி!
, புதன், 2 டிசம்பர் 2020 (15:59 IST)
டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டம் குறித்து நகைச்சுவை நடிகர் விவேக் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த விவசாய மசோதாவிற்கு எதிராக பஞ்சாப், ஹரியான உள்ளிட்ட மாநில விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களை கலைக்க கண்ணீர் புகை குண்டு வீசியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் அவர்கள் விடாமல்  7வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இதற்கு எதிர்க்கட்சிகளிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் ஆதரவுகள் அதிகமாகி வருகின்றன.

இந்நிலையில் நகைச்சுவை நடிகர் விவேக் இன்று காலை தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘காலை வணக்கம்! தினமும் உணவு உண்ணும் போதும் அதை விளைவித்தவரை, நன்றியோடு நினைத்தல் வேண்டும்!!’ எனத் தெரிவித்து ’சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை ‘ என்ற குறளை பகிர்ந்திருந்தார். இதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன்கள் ‘ விவசாயிகள் போராட்டத்துக்கு நேரடியாகவே ஆதரவு தெரிவித்தால் என்ன?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபாஸின் சலார் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு! இணையத்தில் வைரல்!