Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிகர் வினு சக்ரவர்த்தி பிறந்த தினம் இன்று

நடிகர் வினு சக்ரவர்த்தி பிறந்த தினம் இன்று
, சனி, 15 டிசம்பர் 2018 (12:04 IST)
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் இதேநாளில் பிறந்தவர் தான் வினு சக்ரவர்த்தி. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல்வேறு மொழிகளில் 1000க்கும் மேற்பட்ட படங்களில் வில்லன், குணச்சசித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். 


 
இவர் மதுரை மாவட்டத்திலுள்ள உசிலம்பட்டியில் மேல்புதூரில் ஆதிமூல தேவருக்கும் மஞ்சுவாணி அம்மாளுக்கும் மூத்த மகனாக பிறந்தார். இவருக்கு பிரேமகாந்தன் என்ற இளைய சகோதரரும், குண்டலகேசி என்ற இளைய சகோதரியும் உள்ளனர். இவரின் மனைவி கர்ண பூ ஆவார். இவரின் மகள் சண்முக பிரியா பேராசிரியையாக அமெரிக்காவில் உள்ளார். மகன் சரவண பிரியன் இலண்டனில் மருத்துவராக உள்ளார். இவர் இராயப்பேட்டை வெஸ்லே பள்ளியிலும் மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியிலும் படிப்பை மேற்கொண்டார். வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். இவர் பள்ளி கல்லூரி நாட்களில் நாடகம் எழுதி நடித்து, இயக்கி உள்ளார்.
 
கல்லூரி படிப்பை படித்து முடித்த பின்பு தென்னக ரயில்வேயில் 4 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் கன்னட இயக்குனர் புட்டண்ணா கனகலிடம் கதையாசிரியாராக பணிபுரிந்தார். அவருடன் இணைந்து பணியாற்றிய பரசக்கே கண்ட தின்மா என்ற படம் வெற்றிபெற்றதையடுத்து அதை திருப்பூர் மணி தமிழில் தயாரிக்கத் திட்டமிட்டார். அதன் பொருட்டு இவர் தமிழ் திரையுலகுக்கு வந்தார். பரசக்கே கண்ட தின்மா என்ற படம் ரோசாப்பூ ரவிக்கைக்காரி என்று தமிழில் சிவகுமாரை கொண்டு எடுக்கப்பட்டது.
 
வண்டிச்சக்கரம் என்ற படத்தில் சிலுக்கு என்ற பாத்திரம் சிலுக்கு  ஸ்மிதாவை சினிமாவுக்கு அறிமுகம் செய்தவர் இவர் தான்.
 
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படமான தி டர்ட்டி பிக்சர்சில் நடித்த வித்யா பாலன், சிலுக்குவாக நடிக்க சரியான தேர்வல்ல என்றும் தெரிவித்தார்.
 
உயர் ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவு அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஏப்ரல் 27, 2017 அன்று உயிரிழந்தார்.

2007ல் வெளிவந்த முனி திரைப்படம் அவரின் ஆயிரமாவது படமாகும். இறுதியாக 2014ல் வெளிவந்த வாயை மூடி பேசவும் படத்தில் நடித்திருந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

என் மீதான அந்த இமேஜை உடையும்: புது உற்சாகத்தில் ராஷி கண்ணா