Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நடிகர் விமலின் கன்னிராசி படத்திற்கு தடை...

Advertiesment
நடிகர் விமலின் கன்னிராசி படத்திற்கு தடை...
, வெள்ளி, 27 நவம்பர் 2020 (17:29 IST)
நடிகர் விமல் மற்றும் வரலட்சுமி நடித்துள்ள படம் கன்னிராசி. இப்படம் இன்று வெளியாகவேண்டியது. ஆனால் இப்படத்திற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் கன்னிராசி. இப்படத்தில் நடிகர் விமல் மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர்.

இபடத்தின் தமிழகம் ,கர்நாடகா, கேரளா, புதுச்சேரி ஆகிய பகுதிகளின் விநியோக உரிமையை மீடியா டைம்ஸ் என்ற நிறுவனம், ரூ. 17 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இந்நிலையில் மீடியா டைம்ஸ் நிறுவனம் சென்னை மாநகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில், இப்படத்தின் உரிமையை வாங்கும்போது,  ஒப்பந்தத்தில் கூறியுள்ளபடி 2018 ஆம் ஆண்டுக்குள் தயாரிப்பாளர் இப்படத்தை வெளியிடாமல் வேறு  நிறுவனத்திற்கு கன்னிராசி திரைப்படத்தை விற்றுவிட்டார்.

எனவே தங்களிடம் பெறப்பட்ட ரூ.17 லட்ச ரூபாயை வட்டியுடன் சேர்த்து ரூ.21 லட்சத்து 8 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் அதுவரை இப்படத்தை வெளியிடத் தடை விதிக்கவேண்டுமெனவும் கோரியிருந்தது.

இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் கன்னிராசி படத்தை வெளியிட இடைக்காலட் தடைவிதித்தது. மேலும் இதுதொடர்பாக பதிலளிக்க கிங் மூவி மேக்கர்ஸ் நிறுவன உரிமையாளர் ஷாமிஸ்ன் இப்ராஹிம் வரும் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர்..??