Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

“இன்று சினிமாவில் தளபதி… நாளை தமிழகத்தின் முதல்வரே” – விஜய் ரசிகர்கள் வைத்த போஸ்டர்!

Advertiesment
“இன்று சினிமாவில் தளபதி… நாளை தமிழகத்தின் முதல்வரே” – விஜய் ரசிகர்கள் வைத்த போஸ்டர்!
, திங்கள், 5 டிசம்பர் 2022 (09:43 IST)
சினிமாவில் நடிகர் விஜய் இன்றோடு 30 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.

நடிகர் விஜய் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலமாக நடிகராக அறிமுகமானார். அதன் பின்னர் படிப்படியாக வளர்ந்து இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது சினிமாவில் அவரின் 30 வருடங்கள் நிறைவையொட்டி, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்ட விஜய் ரசிகர்கள் வைத்துள்ள பேனரில் விஜய்யை தமிழகத்தின் நாளைய முதல்வர் என்பது போல வாசகங்கள் எழுதி போஸ்டர் வைத்துள்ளனர். இவை சமூகவலைதளங்களில் கூடுதல் கவனத்தை பெற்று வருகின்றன.
webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“பாலா அண்ணனின் உணர்வுகளுக்கு…” – வணங்கான் படத்தில் இருந்து 2டி நிறுவனமும் விலகல்!