Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Wednesday, 23 April 2025
webdunia

லிப் லாக்கிற்கு 19 டேக்குகள் வாங்கிய புதுமுக ஹீரோ

Advertiesment
நடிகர்
, சனி, 15 செப்டம்பர் 2018 (13:16 IST)
மெட்ரோ பட நாயகன் சிரிஷ் நடித்து வரும் ராஜா ரங்குஸ்கி படத்தில் ஹீரோயுடனான லிப்லாக் காட்சியில் 19 டேக்குகள் வாங்கியதாக அவர் கூறியிருக்கிறார்.
கடந்த 2016 ஆண்டு இயக்குனர் தரணிதரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ஜாக்சன் துறை. சத்யராஜ், சிபிராஜ், பிந்து மாதவி, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன் இந்த படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் நினைத்த அளவிற்கு வெற்றி பெறவில்லை.
 
இந்நிலையில் தரணிதரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'ராஜா ரங்குஸ்கி'. இந்த படத்தின் நாயகனாக சிரிஷ் நடித்துள்ளார். இவர் மெட்ரோ படத்தில் நாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சாந்தனி நடித்துள்ளார்.
webdunia
இந்த படத்தின் ஸ்னீக் பீக் நேற்று வெளியிடப்பட்டது. அப்போது பேசிய இந்த படத்தின் நாயகன் சிரிஷ், சாந்தனி எனது நீண்ட நாள் தோழி. அவருடன் இந்த படத்தில் லிப் லாக் சீனில் நடிக்க வேண்டியதாயிற்று. இது எனக்கு சற்று பயத்தை ஏற்படுத்தியது.
webdunia
எனினும் 19 டேக்குகளுக்கு பின்னர் அந்த காட்சியை நடித்து முடித்தேன் என அவர் கூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'எப்ப அந்த ஆசை வருகிறதோ', அப்போது திருமணம் - டாப்ஸி