Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சுசாந்த் சிங் ராஜ்புட்டின் 50 ஆசைகள் – டிவிட்டரில் பட்டியல்!

Advertiesment
சுசாந்த் சிங் ராஜ்புட்டின் 50 ஆசைகள் – டிவிட்டரில் பட்டியல்!
, திங்கள், 15 ஜூன் 2020 (12:11 IST)
பிரபல இந்தி நடிகரான சுசாந்த் சிங் ராஜ்புட் நேற்று மும்பையில் உள்ள தனது அபார்ட்மெண்ட்டில் தற்கொலை செய்துகொண்டார்.

அவரது மரண செய்தி இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் நடிகராக இருந்தாலும், அவர் தோனியின் பையோபிக்கில் நடித்ததால் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டார். இந்நிலையில் அவர் தன்னுடைய 50 ஆசைகளை வெளியிட்டு அதை நிறைவேற்றிக்கொள்ள போவதாக சில மாதங்களுக்கு முன்னதாக டிவிட்டரில் தெரிவித்து இருக்கிறார்.

அதில் 12 ஆசைகள் நிறைவேறிவிட்டதாகவும் பின்னர் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதற்கு பின்னர் அவர் பெயரில் எந்தவொரு பதிவுகளும் டிவிட்டரில் இல்லை. அவரது ஆசைகளில் முக்கியமானவைகளில் சில:-
  • விமானத்தை இயக்க வேண்டும்,
  • சிறு குழந்தைகள் விண்வெளி குறித்து அறிந்துகொள்ள உதவ வேண்டும்,
  • கைலாய மலையில் தியானம் செய்ய வேண்டும்,
  • வெடிக்கும் எரிமலை அருகே படம்பிடிக்க வேண்டும்,
  • 1000 மரங்கள் நட வேண்டும்,
  • பண்ணை தொழில் செய்ய கற்க வேண்டும்,
  • லம்போர்கினி கார் வாங்க வேண்டும்,
  • விவேகானந்தர் குறித்து ஆவணப்படம் எடுக்க வேண்டும்,  
  • இலவச புத்தகங்கள் கிடைக்க சேவை செய்ய வேண்டும்.
எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இது தற்கொலை அல்ல கொலை - சுஷாந்த் சிங் மரணம் குறித்து பப்பு யாதவ் பரபரப்பு பேட்டி!