பழங்குடியினர் பற்றி அவதூறுப் பேச்சு… விஜய் தேவரகொண்டா மேல் வழக்கு!

vinoth
திங்கள், 5 மே 2025 (07:43 IST)
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அவர் நடித்த குஷி திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து அவர் இப்போது அவர் ஒரு சர்ச்சையில் சிக்கி அது அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்படும் அளவுக்கு சென்றுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் சூர்யாவின் ரெட்ரோ படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி ஐதராபாத்தில் நடந்தபோது அதில் சிறப்பு விருந்தினராக விஜய் தேவரகொண்டா கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசும்போது “பாகிஸ்தானியர்கள் குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் பழங்குடியினர் போல நடந்து கொள்கிறார்கள்’ என்று பேசினார். இதையடுத்து அவர் பழங்குடியினரை இழிவுபடுத்தும் விதமாகப் பேசியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தன் பேச்சுக்காக அவர் மன்னிப்புக் கேட்டபோதும், தற்போது அவர் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மிஸ்டர் நெதன்யாகு கழற்றிவைத்த இதயத்தை எடுத்து அணிந்துகொள்ளுங்கள்.. காஸா போர் குறித்து வைரமுத்து..!

ரூ.215 கோடி பணமோசடி வழக்கு: நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

வித்தியாசமான உடையில் கவர்ச்சிப் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

வெண்ணிற உடையில் அள்ளும் அழகில் அசத்தும் திஷா பதானி!

முதல் நாள் வசூல் இவ்வளவுதானா?... கவினின் ‘கிஸ்’ படம் திணறல்!

அடுத்த கட்டுரையில்
Show comments