Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெர்மனி தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி.. எலான் மஸ்க் ஆதரித்த கட்சியும் தோல்வி..!

Advertiesment
ஜெர்மனி தேர்தலில் ஆளுங்கட்சி படுதோல்வி.. எலான் மஸ்க் ஆதரித்த கட்சியும் தோல்வி..!

Mahendran

, திங்கள், 24 பிப்ரவரி 2025 (11:39 IST)
ஜெர்மனியில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையில் சமூக ஜனநாயக கட்சி ஆட்சி நடத்தி வந்த நிலையில் திடீரென கடந்த நவம்பரில் கூட்டணி கட்சியை சேர்ந்த நிதி அமைச்சர் நீக்கப்பட்டார்.  இதன் விளைவாக நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஒலாப் ஸ்கால்ஸ் அரசு தோல்வியடைந்ததால், நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த தேர்தலில், ஆளும் கட்சி சார்பில் ஒலாப் ஸ்கால்ஸ், எதிர்க்கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்  மற்றும் வலதுசாரி ஏ.எப்.டி. கட்சி போட்டியிட்ட நிலையில் வாக்குப்பதிவு பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெற்றது.

முதற்கட்ட எண்ணிக்கையின் படி, சமூக ஜனநாயகக் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து, வெறும் 16% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதே நேரத்தில், எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ்  28.5% வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் காரணமாக, பிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர்  விரைவில் பதவியேற்க உள்ளார்.

மேலும், வலதுசாரி கட்சியான ஏ.எப்.டி. 20% வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.   இந்த கட்சிக்கு தொழிலதிபர் எலான் மஸ்க் சமூக ஊடகங்கள் மற்றும் வீடியோ மூலம் ஆதரவு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெயலலிதா வீட்டிற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. பிறந்த நாளில் செய்த மரியாதை..!