Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாதி சம்பளம் கொடுத்து ஏமாற்றிய மார்வெல்! விடைபெறும் சூப்பர்ஹீரோ நடிகர்! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Prasanth Karthick
ஞாயிறு, 4 மே 2025 (14:44 IST)

ஹாலிவுட்டில் பிரபலமான மார்வெல் ஸ்டுடியோஸின் சூப்பர்ஹீரோ படங்களுக்கு உலகம் முழுக்க கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 2008ல் மார்வெல் தொடங்கிய சினிமாட்டிக் யுனிவர்ஸ் கேப்டப் அமெரிக்கா, தோர், ஹல்க், அயர்ன்மேன், ப்ளாக் விடோ, ஹாவ்க் ஐ, ஸ்பைடர்மேன், ஸ்கார்லெட் விட்ச், விஷன், ஆண்ட்மேன், ஃபால்கன், விண்டர் சோல்ஜர் என டஜன் கணக்கான சூப்பர் ஹீரோக்களை அறிமுகம் செய்துள்ளனர்.

 

ஏராளமான திரைப்படங்கள், வெப் சிரிஸை வெளியிட்டுள்ள மார்வெலில் Hawk Eye என்ற சூப்பர்ஹீரோ கதாப்பாத்திரத்தில் ஜெரெமி ரன்னர் கடந்த 2008ம் ஆண்டு முதலாகவே நடித்து வருகிறார். ஆனாலும் சமீபத்தில்தான் அவருக்கென தனியாக ஒரு வெப் தொடர் வெளியானது. Hawk Eye Season 1ன் வெற்றியை தொடர்ந்து தற்போது மார்வெல் சீசன் 2வை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

 

இந்நிலையில்தான் மார்வெல் பட ப்ராஜெக்டில் இருந்து ஜெரெமி ரன்னர் வெளியேறியதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து சமீபத்தில் அவரே பேசியிருந்தார், அதில் மார்வெல் படங்களில் நடிப்பவர்களில் சின்ன கதாப்பாத்திரங்கள் மோசமாக நடத்தப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார். ஹாவ்க் ஐ சீசன் வெற்றியால்தான் அடுத்த சீசன் எடுக்கப் போகிறார்கள். ஆனால் அதில் முதல் சீசனில் நடித்ததற்கு அளிக்கப்பட்ட சம்பளத்தில் பாதிதான் கொடுக்கப்படும் என கூறியுள்ளார்கள். இதனால் ஜெரேமி ரன்னர் வெளியேறியுள்ளார். இந்த சம்பவம் மார்வெல் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நானியின் ஹிட் 3.. சூப்பர் ஹிட்..! 3 நாட்களுக்குள் வசூலை வாரி குவித்த சம்பவம்!

முகலாயர்கள் பாடங்களை நீக்கிய NCERT! ஏன் இதை செய்யல? - நடிகர் மாதவன் கேள்வி!

”யோகி பாபு பண்றதுலாம் கேவலமான விஷயம்” தயாரிப்பாளர் கடும் குற்றச்சாட்டு! - இயக்குநர் ரியாக்‌ஷன் என்ன?

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் நடிக்கும் ‘பைசன் காளமாடன்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments