Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிரபல நடிகரின் கார் மோதி ஒருவர் காயம்… நேரில் சென்று ஆறுதல்!

பிரபல நடிகரின் கார் மோதி ஒருவர் காயம்… நேரில் சென்று ஆறுதல்!
, செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (09:42 IST)
மலையாள சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சுராஜ் வெஞ்சரமூடு. இவர் ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன், டிரைவிங் லைசன்ஸ், தொண்டிமுதலும் திருக்சாக்‌ஷியும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் இவர் எர்ணாகுளத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு காரில் சென்ற போது, இவர் கார் மோதி மலப்புரத்தைச் சேர்ந்த ஷரத் என்பவர் காயமடைந்தார். அவருக்கு காலில் பலத்த காயமேற்பட்ட நிலையில் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து போலீஸார் சுராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷரத்தை சுராஜ், நேரில் சென்று சந்தித்து வருத்தம் தெரிவித்து ஆறுதல் கூறினார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

150 கோடி ரூபாய்க்கு விற்பனையான கார்த்தியின் மூன்று படங்கள்!