கார்த்தி பொன்னியின் செல்வன் படத்துக்கு பிறகு இப்போது ராஜு முருகன் இயக்கும் ஜப்பான் படத்தை இயக்கி முடித்துள்ளார். இதையடுத்து நலன் குமாரசாமி இயக்கும் படத்திலும் நடித்து வரும் அவர், அடுத்து 96 படத்தின் இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த மூன்று படங்களின் திரையரங்க உரிமை அல்லாத டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமைகள் சுமார் 150 கோடி ரூபாய்க்கு விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டு கார்த்தி விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என அடுத்தடுத்து ஹிட் படங்களாக கொடுத்ததை அடுத்து அவரின் மார்க்கெட் அதிகரித்துள்ளது.