போதைப் பொருள் பயன்படுத்தினாரா?... விசாரணை வளையத்துக்குள் வந்த நடிகர் ஸ்ரீகாந்த்!

vinoth
திங்கள், 23 ஜூன் 2025 (15:02 IST)
தமிழ் சினிமாவில் ரோஜாக் கூட்டம் படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீகாந்த் தொடர்ந்து சில ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருந்தார்.ஆனால் சமீபகாலமாக அவரின் எந்த படமும் ஹிட்டாகவில்லை. அதனால் மார்க்கெட் இல்லாத நடிகர்கள் பட்டியலில் அவர் இணைந்தார்.

இந்நிலையில் இப்போது அவர் கொக்கைன் என்ற போதைப் பொருள் பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. சமீபத்தில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவர் தன்னிடம் ஸ்ரீகாந்த் கொக்கைன் வாங்கிப் பயன்படுத்தியதாகவும், அதை தானே நேரில் பார்த்ததாகவும் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து ஸ்ரீகாந்த் சம்மன் செய்யப்பட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோதனை செய்யப்பட்டுள்ளார். இதில் அவர் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டால் அவர் கைது செய்யப் படவும் வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

25 நாட்களில் உலகம் முழுவதும் 70 கோடி ரூபாய்.. ‘பைசன்’ அசத்தல் வசூல்!

’பேட் கேர்ள்’ படம் சிரிக்கவும் அழவும் வைத்தது… பிரபல நடிகை பாராட்டு!

அடுத்த ஆண்டுக்குத் தள்ளிப் போகும் வெங்கட்பிரபு படம் –சிவகார்த்திகேயன்தான் காரணமா?

DC படத்துக்காக இத்தனைக் கோடி ரூபாய் சம்பளம் வாங்கினாரா லோகேஷ்?

ஜேசன் சஞ்சய்யின் ‘சிக்மா’ படத்தை நிராகரித்தாரா துல்கர் சல்மான்? – காரணம் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments