தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தனது கடைசிப் படமான ஜனநாயகன் படத்துக்குப் பிறகு முழு நேர அரசியலுக்கு செல்லவுள்ளார். கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் மார்க்கெட் உச்சத்தில் உள்ளது. அவரது சுமாரான படங்கள் கூட நல்ல வசூலைப் பெறுகின்றன. இந்த நேரத்தில்தான் விஜய் சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்கிறார்.
இந்நிலையில் விஜய்யின் மிடுக்கான நடிப்புப் பாணியை அவரின் நெருங்கிய நண்பரான சீரியல் நடிகர் சஞ்சீவ் தொடர்ந்து காப்பியடித்து நடித்து வருகிறார். இது காரணமாக அவர் மீது தொடர்ந்து கேலிகளும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் தொடர்ந்து அவர் விஜயின் ஜெராக்ஸ் போல நடித்து வருகிறார்.
இந்நிலையில் சஞ்சீவ்வின் நெருங்கிய நண்பரான நடிகர் ஸ்ரீ இதுபற்றி தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார். அதில் “சஞ்சீவிடம் அவன் விஜய் மாதிரி பண்ணுவது சூப்பரா இருக்கு என சொல்லியே அவனை இப்படி ஆக்கிவிட்டார்கள். நான் இதுபோல பண்ண வேண்டாம் என அவனிடம் பலமுறை சொல்லியும் அவன் கேட்கவில்லை. இதே சஞ்சீவ்தான் திருமதி செல்வம் என்ற சீரியலில் நன்றாக நடித்து நல்ல பெயரை வாங்கினான். நான் அவனிடம் “நீ நல்லா நடிக்கலன்னு சொல்றவங்களக் கூட நம்பு. ஆனால் சூப்பர் சூப்பர்னு சொல்றவங்கள நம்பாத என சொன்னேன். ஆனால் அவன் கேட்கவில்லை.” எனக் கூறியுள்ளார்.