Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டத்திற்கு நடிகர் சோனு சூட், திருமாவளவன் ஆதரவு !

Webdunia
வெள்ளி, 27 நவம்பர் 2020 (16:30 IST)
பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் அவர்களுக்கு நடிகர் சோனு சூட், மற்றும் திருமாவளவன் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசின் விவசாய மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில் பஞ்சாப், ஹரியானா பகுதிகளில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இந்நிலையில் பஞ்சாப், ஹரியானா விவசாயிகள் தலைநகர் டெல்லியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களை போலீஸார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் டெல்லிக்கு போராட்டக்காரர்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருப்பதால் டெல்லி – ஹரியான தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் உள்ளே வர முடியாத படி எல்லைகள் மூடப்பட்டுள்ளது. இதனால் பஞ்சாப், ஹரியானா, டெல்லி ஆகிய பகுதிகள் பரபரப்புடன் காணப்படுகிறது.

இந்நிலையில் விசிக  தலைவரு எம்பியுமான் தொல். திருமாவளவன் தனது டுவிட்டர் பக்கத்தில், #விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி வன்முறை வெறியாட்டத்தை அரங்கேற்றியுள்ள

அரியானா மாநில பாஜக அரசு மற்றும் மைய அரசின் கட்டுப்பாட்டிலுள்ள புதுதில்லி காவல்துறையின் விவசாயிகள் விரோதப் போக்கை #விசிக வன்மையாகக் கண்டிக்கிறது. மோடி அரசே,  மக்கள் விரோத வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறு! எனப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் சோனு சூட், விவசாயி என் தெய்வம் என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

தோனி க்ரவுண்ட்ல இறங்குன மாதிரி இருந்துச்சு! வட இந்தியாவில் தனுஷிற்கு கிடைத்த க்ளாப்ஸ்! – வியந்து சொன்ன நடராஜன்!

அமைச்சர் மனைவியிடம் திருமணம் குறித்து கேட்டேன்: வைரமுத்துவின் பதிவு..!

ரஜினியின் கூலி திரைப்படத்தில் இருந்து வெளியேறிய பிரபல நடிகர்!

சென்னை ஐஐடியோடு இணைந்து இசை ஆராய்ச்சி மையத்தை தொடங்கும் இளையராஜா!

ஜூனியர் NTR நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் புதிய படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments