Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பருத்திவீரன்' பட விவகாரத்தில் இயக்குநர் அமீருக்கு சமுத்திரகனியும் ஆதரவு!

Advertiesment
samuthirakani
, சனி, 25 நவம்பர் 2023 (21:20 IST)
பருத்திவீரன் பட விவகாரத்தில்  இயக்குனர் அமீர் பற்றி சமீபத்தில் பேசிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கடுமையாக குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

webdunia

இந்த நிலையில் நடிகர் சசிக்குமார், அமீருக்கு ஆதரவளித்துள்ள நிலையில், நடிகர் சமுத்திரகனியும் அமீருக்கு ஆதரவளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’அந்த பஞ்சாயத்து வந்தப்ப யார் வேணாலும், என்ன வேணாலும் பேசியிருக்கலாம்..ஆனா களத்திலேயே இருந்த கார்த்தி அமைதியா இருக்கிறதத் தான் என்னால் இப்ப வரைக்கும் ஏத்துக்க முடியல...

ஒருநாள் அமீர் அண்ணனோட நண்பர் ஒருத்தர்...எதுக்கு இது அப்டியே உட்டுட வேண்டியது தானே ..நிறுத்துங்க படத்தை .. அப்படின்னு சொன்னாரு..அதுக்கு அமீர் அண்ணன் என்ன சொன்னாரு தெரியுமா?

“ஆரம்பிச்சுட்டோம்...கார்த்தியோட எதிர்காலம் இது. அதுமட்டும் இல்லாம பெரியவர் என் கைய புடிச்சிட்டு கார்த்தி கைய புடிச்சு என் கைல கொடுத்துட்டு சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் காதிலேயே இருக்கு...நான் இவங்களுக்காக ஏதும் செய்யலிங்க.. அந்த பெரிய மனுஷனுக்காகத்தான் செய்றேன்..."

அப்படின்னு சொல்லி செஞ்சார்...அன்னைக்கு அவரு படத்தை நிறுத்தி இருந்தா இந்த படம் வந்துருக்குமா..? ஒரு ஹீரோ வெளில வந்துருப்பாரா...? என்ன பேச்சு பேசுறீங்க?ஆனா அவ்வளவு தூரம் பெருந்தன்மையா நடந்துக்கிட்ட ஒரு மனுஷனைதான் எல்லாருமா சேர்ந்து..!

இப்படி அம்பது அறுபது பேர்ட்ட வாங்குன பணத்துக்குத்தான் நீங்கெல்லாம் சேர்ந்து உக்காந்து கணக்கு கேட்டீங்க...எனக்கே தெரியல. எத்தனை பேர்ட்ட போய்ட்டு வாங்கிட்டு வந்தேன் னு...யார் யார் எவ்ளோ கொடுத்தாங்க-ன்னு....

சொன்ன வார்த்தையை காப்பாத்தணும்னு பல பேர்கிட்ட கை ஏந்தி அந்த படத்தை முடிச்சாரு அமீர் அண்ணன்..அதுக்கு ஆயிரம் கோடி இல்ல..லட்சம் கோடி கொடுத்தாக்கூட ஈடாகாதுங்க...

நீங்களெல்லாம் ஏதோ ஒண்ணரை கோடிக்கு கணக்கு கேட்டுட்டு இருக்கீங்க ஞானவேல்...! செலவு பண்ணது அதுக்கும் மேல...அதெல்லாம் பாவம்...

கணக்கிலேயே இல்ல! அமீர் அண்ணனோட பணம் அது...

இப்ப நான் சொல்லிருக்கிறது ஒரு சம்பவம் தான்... இன்னும் நிறைய இருக்கு தேவைப்பட்டா நானும் பேச வேண்டி வரும்...

இந்தமாறி பொதுவெளில் தப்பு தப்பா பேசுறத இதோட நிறுத்திக்கங்க... அதுதான் எல்லாருக்கும் நல்லது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிகிதா காந்தியின் இசை நிகழ்ச்சியின்போது நெரிசலில் சிக்கி 4 பேர் பலி!