நடிகர் சரவணனுக்கு தமிழக அரசு கொடுத்த புதிய பதவி!

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (21:02 IST)
சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட நடிகர் சரவணனுக்கு தமிழக அரசு கலைமாமணி விருது கொடுத்து கவுரவித்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நடிகர் சரவணனுக்கு புதிய பதவி ஒன்றை தமிழக அரசு கொடுத்துள்ளது
 
ஒவ்வொரு ஆண்டும் குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தரமான தமிழ் திரைப்படங்களுக்கு ரூபாய் 7 லட்சம் மானியம் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு கடந்த சில வருடங்களாக செயல்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு தேர்வு செய்யும் திரைப்படங்களுக்கு மானியம் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த 2015 முதல் 2017 வரையிலான ஆண்டுகளில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் மானியம் பெற தகுதியான திரைப்படங்களை தேர்வு செய்ய தற்போது ஒரு குழு அமைக்கப்பட்டது 
 
 
ஓய்வு பெற்ற நீதிபதி குணசேகரன் என்பவரைத் தலைவராகக் கொண்ட இந்த தேர்வுக்குழுவில் நடிகர் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இயக்குனர் ஆர்வி உதயகுமார், நடிகர் சிங்கமுத்து ஆகியோரும் இந்த குழுவில் உள்ளனர்.  சரவணன் உள்பட இந்த குழுவினர் தேர்வு செய்யும் படங்கள் மட்டுமே ரூ 7 லட்சம் மானியம் பெற தகுதியுள்ள திரைப்படமாக தேர்வு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் ஐந்தே மாதங்களில் காங்கிரஸில் இருந்து விலகிய கமல் பட நடிகை!