சத்துணவு அமைப்பாளரிடம் தகாத உறவு ... ஆசிரியரை வெளுத்து வாங்கிய ஊர் மக்கள்

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (20:36 IST)
நாமக்கல் மாவட்டம் ,புதன்சந்தை அருகிலுள்ள எஸ். உடுப்பத்தில் ஊரட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவர்கள் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே அங்கன்வாடி மையமும் செயல்பட்டுவருகிறது. 
இந்தப் பள்ளியில், கடந்த 4 வருடங்களாகப் பணியாற்றி வருபவர் ஆசிரியர் சரவணன். இவர், புதன்சந்தையைச் சேர்ந்தவர். இந்நிலையில் அங்கன்வாடியில் பணியாற்றும் ஜெயந்தி என்ற பெண்ணுக்கும் இவருக்கும் இடையே தகாத உறவு இருந்துள்ளதாகத் தெரிகிறது.
 
சில மாதங்களுகு முன்னர்,இருவரும் பள்ளிக் கருவறையிலேயே தகாத உறவில் ஈடுபட்டுள்ளனர்.அதை மாணவர்கள் பார்த்து தங்கள் பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். அவர்களும் பள்ளியில் வந்து தலைமையாசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தலைமையாசிரியர் சரவணன் மற்றும் ஜெயந்திக்கும் எச்சரிக்கை விடுத்தார்.
 
இந்நிலையில் இன்று, சரவணன் - ஜெயந்தி இருவரும் பள்ளி வளாகத்தில் மீண்டும் தகாத உறவில் ஈடுபட முயன்றதாகத் தெரிகிறது,. அதனால் பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் அடித்து, உடைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்தனர்  போலீஸார். போலீஸாரிடம், ஆசிரியர் மீது மக்கள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் விவசாயத்திற்கான நகைக்கடன் ரத்து: மத்திய அரசின் அறிவிப்பால் அதிர்ச்சி