நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.. துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி..!

Siva
வெள்ளி, 19 செப்டம்பர் 2025 (07:32 IST)
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பலனின்றி நேற்று இரவு காலமானார். அவரது திடீர் மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
 
விஜய் டிவியில் 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், 'மாரி', 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்', 'சிங்கம் 3', 'விஸ்வாசம்' உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
கடந்த ஆண்டு மஞ்சள் காமாலை நோயிலிருந்து மீண்டு வந்த ரோபோ சங்கர், திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சையின் பலனின்றி காலமானார்.
 
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் சிம்பு உட்பட பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்.. துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி..!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்கிறாரா நடிகை அம்மு? தெருநாய் விவகாரத்தில் பிரபலமானவர்..!

குஷி படத்தை அடுத்து இன்னொரு விஜய் படம் ரீரிலீஸ்.. அதுவும் சூப்பர் ஹிட் படம் தான்..!

பாலிவுட் படத்தில் நடிக்கும் ஹாலிவுட் நடிகைக்கு ரூ.530 கோடி சம்பளமா? ஆச்சரிய தகவல்..!

கல்கி படத்திலிருந்து தீபிகா படுகோன் நீக்கம்! பட தயாரிப்பாளர் திடீர் முடிவு! - என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments