Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கே ஜி எப் 2 வில் டெரர் வில்லன்…. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த படக்குழு!

கே ஜி எப் 2 வில் டெரர் வில்லன்…. புகைப்படத்தை வெளியிட்டு உறுதி செய்த படக்குழு!
, புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:32 IST)
கேஜிஎப் இரண்டாம் பாகத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.

எப்போது வரும் என்று இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களால் பெரிது எதிர்பார்க்கப்படும் படமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2ன் புதிய அப்டேட் ஒன்றை அதன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. யஷ் நடித்து 2018 டிசம்பரில் வெளியான படம், கே.ஜி.எஃப்: சாப்டர் 1. கன்னடத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

இந்தியா முழுவது மிகப்பெரும் வரவேற்பை பெற்றது இந்த படம். இதனை அடுத்த பாகமான கே.ஜி.எஃப்: சாப்டர் 2 எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அதீரா பாத்திரத்தில் சஞ்சய் தத் நடிப்பது உறுதியான நிலையில் அவருக்கு புற்றுநோய் ஏற்பட்டு அமெரிக்காவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனால் அவர் காட்சிகளை எப்படி எடுப்பது என படக்குழு யோசனையில் உள்ளது. இந்நிலையில் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க பிராகாஷ் ராஜை ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. இது சம்மந்தமாக இயக்குனர் பிரசாந்த் நீல் உடன் பிரகாஷ் ராஜ் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புகழ்ந்து பேசும் நண்பனுக்குப் பயந்தே இருங்கள் - ராதிகா சரத்குமார் டுவீட்