Webdunia - Bharat's app for daily news and videos

Install App

20 முறைக்கு மேல் தற்கொலை செய்ய முயற்சித்தேன் – மூத்த நடிகர் தெரிவித்த அதிர்ச்சி செய்தி!

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2020 (14:10 IST)
நடிகர் பொன்னம்பலம் சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் தற்கொலை முயற்சி செய்ததாகக் கூறியுள்ளார்.

மைக்கேல் மதனகாமராஜன் படத்தில் சிறுவேடத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் நடிகர் பொன்னம்பலம். அதற்கு முன்பே பல படங்களில் அவர் ஸ்டண்ட் நடிகராக பணிபுரிந்திருக்கிறார். அதன் பின் பல படங்களில் நடித்த பொன்னம்பலம் ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வில்லன் நடிகராக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் வாய்ப்புகள் குறையவே நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்தார். இதற்கிடையில் அரசியலில் ஈடுபட்ட அவர் தமிழக பாஜகவில் இணைந்தார்.

பிக்பாஸில் கலந்துகொண்ட பிறகு அவர் மீண்டும் தமிழக ரசிகர்களிடம் பிரபலமடைந்தார். இந்நிலையில் தற்போது சிறுநீரகக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு முன்னணி நடிகர்களான ரஜினி மற்றும் கமல் மற்றும் அவர் சார்ந்த பாஜக ஆகியவர்கள் நிதியுதவி அளித்தனர்.

இந்நிலையில் இப்போது உடல்நலம் தேறி வந்துள்ள பொன்னம்பலம் ஒரு இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் ‘நான் நிறைய படங்களில் நடித்து நிறைய சம்பாதித்தேன். ஆனால் எதையும் சேர்த்து வைத்துக்கொள்ளவில்லை. இப்போது சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் கஷ்டப்படுகிறேன். சரத்குமார் மற்றும் கமல் ஆகியவர்கள் உதவி செய்துள்ளனர். அதே போல என்னுடன் நடித்த முன்னணி நடிகர்கள் உதவினால் நன்றாக இருக்கும். சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் 20 முறைக்கு மேல் தற்கொலை முயற்சி மேற்கொண்டேன். நான் உறுப்பினராக இருக்கும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கம் எனக்கு எந்த உதவியையும் செய்யவில்லை.’ என உருக்கமாக பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் இவர்தான் கதாநாயகியா?.. வெளியான தகவல்!

சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’!

திரையரங்கில் ஜொலிக்காத ஜீவாவின் ‘அகத்தியா’… ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மனோஜுக்கு அவரது மகள்களைக் கொண்டே இறுதி மரியாதை செய்ய வைத்த பாரதிராஜா!

விக்ரம்மின் வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.. பின்னனி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments