Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாவனாவை இறந்துவிட்டதாக சொன்ன சங்க நிர்வாகி – கடுப்பாகி விலகிய பார்வதி!

Advertiesment
Actres bhavana
, செவ்வாய், 13 அக்டோபர் 2020 (12:23 IST)
மலையாள சினிமா நடிகர்கள் சங்கமான அம்மாவில் இருந்து நடிகர் பார்வதி விலகுவதாக அறிவித்துள்ளார்.

முன்னணி மலையாள மற்றும் தமிழ் நடிகையான பாவனா சில ஆண்டுகளுக்கு முன்னர், படப்பிடிப்பை முடித்துவிட்டு திருச்சூரில் இருந்து கொச்சிக்கு திரும்பிக் கொண்டிருந்த போது 3 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று 2 மணி நேரத்திற்கும் மேல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் மலையாள திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.  இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் திலிப் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதையடுத்து மலையாள நடிகர்கள் சங்கத்தில் இருந்து சில நடிகைகள் விலகினர். இந்நிலையில் இப்போது நடிகை பார்வதியும் விலகியுள்ளார்.

அம்மாவின் பொதுச்செயலாளரான பாபு சமீபத்தில் அளித்த நேர்காணலில் டி 20 படத்தின் இரண்டாம் பாகத்தில் பாவனா நடிப்பாரா எனக் கேட்கப்பட்டது. ஆனால் அவரோ ‘பாவனா நடிக்கமாட்டார். ஏனென்றால் அவட் சங்கத்தில் இருந்து விலகிவிட்டார். இறந்தவர் எப்படி நடிக்க முடியும்’ எனக் கேட்டார். இது சலசலப்பை உண்டாக்கிய நிலையில் பாவனாவுக்கு ஆதரவாக பார்வதி அம்மாவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீச்சல் குளத்தில் முட்டிபோட்டு கவர்ச்சி காட்டிய ரைசா - ஃபேஸ் எக்ஷ்பிரஷன்ஸ் தான் சும்மா அள்ளுது!