Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தன்னை தானே கடத்தி கொண்ட சிறுவன்; தந்தைக்கு பணம் கேட்டு மிரட்டல்

Advertiesment
தன்னை தானே கடத்தி கொண்ட சிறுவன்; தந்தைக்கு பணம் கேட்டு மிரட்டல்
, வியாழன், 8 அக்டோபர் 2020 (11:05 IST)
சென்னையில் 14 வயது சிறுவன் தான் கடத்தப்பட்டதாக தந்தையிடம் பணம் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 14 வயது சிறுவன் ஒருவன் ட்யூசன் வகுப்புக்காக சென்றபோது மாயமாகியுள்ளான். இந்நிலையில் சிறுவனின் தந்தைக்கு போன் கால் வந்துள்ளது. அதில் பேசிய நபர் சிறுவனை தாங்கள் பிடித்து வைத்துள்ளதாகவும், ரூ.10 லட்சம் கொடுத்தால்தான் சிறுவனை விடுவிப்போம் என்றும் கூறியுள்ளனர்.

இதனால் பதட்டமடைந்த சிறுவனின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதை தொடர்ந்து தேடுதல் வேட்டை மேற்கொண்ட போலீசார் சிறுவன் ட்யூசன் செல்லும் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்ததில் அவனை யாரும் கடத்தியதாக தெரியவில்லை. மிரட்டல் கால் வந்த எண்ணை ட்ரேஸ் செய்ததில் சிறுவனே மற்றொரு நபருடன் சேர்ந்து தந்தையிடம் பணம் பறிப்பதற்காக கடத்தல் நாடகம் செய்தது அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கிங் இல்லை கிங் மேக்கர்: பில்டப் கொடுக்கும் எல் முருகன்!