கிரிக்கெட் வீரரிடம் மாதவன் பட்ட அவமானம்… அது கற்றுக்கொடுத்த பாடம்!

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (12:19 IST)
நடிகர் மாதவன் சிறுவயதில் கிரிக்கெட் வீரர் ஒருவருடன் நடந்த மோசமான அனுபவம் ஒன்றை தற்போது பகிர்ந்துகொண்டுள்ளார்.

நடிகர் மாதவன் தமிழ் மற்றும் இந்தி படங்களில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாக அறியப்படுபவர். மேலும் சமூகவலைதளங்கள் மூலமாக அவ்வப்போது ரசிகர்களுடன் தொடர்பிலும் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஒரு வீடியோ கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் மாதவன் ‘நான் 8 வயதாக இருக்கும் போது அப்போது பிரபலமாக இருந்த கிரிக்கெட் வீரரை சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றேன். அப்போது என் நண்பர்களுடன் அவரிடம் ஆட்டோகிராப் வாங்க சென்றேன். அவரோ யாரிடமோ பேசிக்கொண்டே 50 கையெழுத்துகளைப் போட்டுத்தந்தார். அது எனக்கு மிகவும் அவமானமாக இருந்தது.

அந்த சம்பவம்தான் எனது வாழ்க்கையில் எனக்கு பணிவைக் கற்றுத்தந்தது. இப்போது என்னிடம் யாராவது ஆட்டோகிராப் கேட்டால் நான் அவர்களின் கண்களைப் பார்த்துக்கொண்டே போட்டுக்கொடுப்பேன்’ எனக் கூறியுள்ளார். ஆனால் அந்த கிரிக்கெட் வீரர் யார் என்பதை அவர் சொல்லவில்லை.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘அஞ்சான்’ ரீரிலீஸில் சூர்யா இப்படி பண்ணலாமா? நம்பிக்கையை கைவிடாத லிங்குசாமி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments