பிரபாஸ் நடிக்கும் அடுத்த படத்தில் தீபிகா படுகோனே: ஆச்சரிய தகவல்

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (11:38 IST)
பாகுபலி புகழ் நடிகர் பிரபாஸ் நடிக்கவிருக்கும் 20ஆவது திரைப்படத்தின் டைட்டில் ’ராதே ஷ்யாம்’ என்றும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருக்கிறார் என்பதும் இந்த படத்தை கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கவிருக்கிறார் என்றும் வெளியான செய்திகளை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் சற்று முன்பு பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. கீர்த்தி சுரேஷ் நடித்த ’நடிகையர் திலகம் என்ற ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் நாக்அஸ்வின் இயக்கும் இந்த படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது என்பது தெரிந்ததே 
 
பிரபாஸ் நடிக்கவிருக்கும் 21 வது படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நாயகியாக நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீபிகா படுகோனே நடிக்கும் முதல் தெலுங்கு திரைப்படம் இது என்பதும் கோச்சடையான் படத்திற்கு பின்னர் தென்னிந்தியத் திரையுலகில் தீபிகாவின் அடுத்த படம் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிப்பதற்காக தீபிகாவுக்கு மிகப் பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டு இருப்பதாக வெளிவந்த செய்தியால் தெலுங்கு திரையுலகம் ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

டைகர் ஹா ஹுக்கும்! ஜெயிலர் 2 ஷூட்டிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்!

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த துருவ் விக்ரம், அனுபமா! கலகலக்கும் தீபாவளி Celebration!

காந்தாரா சாப்டர் 1 வசூல் சாதனை! ராமேஸ்வரத்தில் தரிசனம் செய்த ரிஷப் ஷெட்டி!

’அவன் வந்துவிட்டான்’.. நடிகை ப்ரினிதி சோப்ரா வீட்டில் சின்ன தீபாவளி..

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

அடுத்த கட்டுரையில்
Show comments