Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்த நடிகர் கருணாஸ்!

Sinoj
புதன், 21 பிப்ரவரி 2024 (20:45 IST)
முன்னாள் அதிமுக நிர்வாகி ஏ.வி.ராஜூ, கூவத்தூர் விவகாரம் தொடர்பாக  ஒரு வீடியோ வெளியிட்டு, அதில் நடிகை திரிஷா பற்றி பேசியிருந்தார்.
 
இது திரைத்துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இதற்கு, ஏ.வி.ராஜூ மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என திரிஷா பதிவிட்ட நிலையில், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.
 
இதையடுத்து, ஏ.வி.ராஜூ மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறியிருந்தார்.
 
அவரது பேச்சுக்கு நடிகரும் ஜனநாயக புலிகள் என்ற கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் ஒரு ஆடியோ வெளியிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.
 
இதையடுத்து, இன்று தென்னிந்திய நடிகர் சங்கமும் முன்னாள் அதிமுக  நிர்வாகி ஏ.வி.ராஜூவின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தது.
 
இந்த நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னையும், திரிஷாவையும் தொடர்புபடுத்தி, சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி.ராஜூ மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி  சென்னை காவல் ஆணையரிடம் ஆன்லைன் மூலம்   நடிகர் கருணாஸ் புகார் அளித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதராஸி படத்தின் மூன்றாவது நாள் வசூல் எவ்வளவு?.. வெளியான தகவல்!

எப்போதோ நடந்திருக்கவேண்டும்… இப்போதுதான் நடக்கிறது… ரஜினியுடன் இணையும் படம் பற்றி மனம்திறந்த கமல்!

மீண்டும் பிலிமில் ஷூட் செய்யும் ராம்சரண் படக்குழுவினர்.. என்ன காரணத்துக்காகத் தெரியுமா?

இந்திய சினிமாவைப் பிரதிபலிக்கும் வகையில் லோகோ… கார் ரேஸ் ஆடையில் பதித்த அஜித்!

பூனம் பாஜ்வாவின் ஓணம் புடவை ஃபோட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments