Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

'விடியல் பயணத் திட்டம் 'பற்றிய ஆய்வில் வெளியான தகவல்

vidiyal payanam

Sinoj

, புதன், 21 பிப்ரவரி 2024 (16:19 IST)
தமிழ்நாடு அரசின் விடியல் பயணத் திட்டம் குறித்து Citizen Consumer and civic action  group என்ற என்.ஜி.ஓ நடத்திய ஆய்வில் இத்திட்டத்தின் மூலம் பெரும்பாலான மக்கள் பயனடையவதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில், பல்வேறு மக்கள் நலப்பணி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில்,  திமுக அரசின் விடியல் பயணத் திட்டம் பற்றி பிரபல என்.ஜி.ஓ  நிறுவனம்  நடத்திய ஆய்வில், இத்திட்டத்தின் மூலம் மாதத்திற்கு சராசரியாக ரூ.800 வரை பெண்கள் சேமிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.
 
மேலும், மாதத்திற்கு ரூ.20 ஆயிரத்திற்கு  கீழ் வருமானம் ஈட்டும் பெண்களில் 90 சதவீதம் பேர் இத்திட்டத்தின் மூலமாகத் தங்களின் தனிப்பட்ட சேமிப்பை அதிகரித்துள்ளதாகவும், இத்திட்டத்திற்குப் பிறகு தனி வாகனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகை திரிஷா குறித்து ஏ.வி.ராஜூவின் சர்ச்சை பேச்சு- தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்