நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் ரிலீஸ் பற்றி முதல் முறையாக பேசியுள்ளார்.
நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான சுல்தான் படத்துக்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்தாலும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் வெற்றி தொடர்பாக சமூகவலைதளங்களில் கார்த்தி ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது அவர் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் பொன்னியின் செல்சன் படத்தை பற்றி ரசிகர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கார்த்தி என்னுடைய அடுத்தபடமாக பொன்னியின் செல்வன் ரிலீஸாகும். இதுவரை 70 சதவீதம் படப்பிடிப்பை முடித்துள்ளோம். 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு முதல்பாகத்தை ரிலீஸ் செய்ய உள்ளோம். கொரோனா காரணமாக ரிலீஸில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 60 ஆண்டுகளாக தமிழ் சினிமா படமாக்க நினைத்ததை இப்போது நடத்திக் கொண்டிருக்கிறோம் எனக் கூறியுள்ளார்.