Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிர்பயா கேஸ் ஓவர்.. பொள்ளாச்சி கேஸ் எப்போ? – நடிகர் கார்த்தி கேள்வி!

Webdunia
வெள்ளி, 20 மார்ச் 2020 (12:34 IST)
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்ட நிலையில் பொள்ளாச்சி சம்பவம் குறித்து நடிகர் கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லியில் 2012ல் மருத்துவ மாணவியை கற்பழித்து கொன்ற வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேருக்கு இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. நாடு முழுவதும் தொடர் பரபரப்புகளை ஏற்படுத்தி வந்த வழக்கில் தற்போது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் நாடு முழுவதும் பல பிரபலங்களும், அரசியல்வாதிகளும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டது குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகர் கார்த்தி ”8 வருடங்கள் கழித்து கடைசியாக நிர்பயாவுக்கு நீதி கிடைத்துவிட்டது. பொள்ளாச்சி சம்பவத்திற்கு எப்போது நீதி கிடைக்கும் என தெரியவில்லை. ஏற்கனவே ஒரு வருடம் முடிந்து விட்டது. நாம் கற்றுக்கொண்ட பாடங்களை நாம் மறக்கக்கூடாது. பாதுகாப்பாக இருங்கள் எப்போதும்” என பதிவிட்டுள்ளார்.

கார்த்தியின் இந்த பதிவுக்கு ஆதரவு தெரிவித்து பலரும் அதை ரீட்வீட் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

விஜய் சேதுபதியின் அடுத்த பட நாயகி தபு அல்ல, கபாலி நாயகி தான்.. சூப்பர் தகவல்..!

குக் வித் கோமாளி 6வது சீசனின் புரமோ வீடியோ.. ஒளிபரப்பாவது எப்போது?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தம்பதிகள் ஆகும் முதல் ஜோடி.. அமீர் - பாவனி திருமண நாள் அறிவிப்பு..!

அனுபமா பரமேஸ்வரனின் கார்ஜியஸ் புகைப்படத் தொகுப்பு!

அழகிய உடையில் ஏஞ்சலாய் ஜொலிக்கும் ப்ரணிதா… க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments