அனைத்து பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது: ஆஷாதேவி
டெல்லியை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் இன்று அதிகாலை திட்டமிட்டபடி சரியாக 5.30 மணிக்கு தூக்கிலிடப்படும் தண்டனை நிறைவேற்றப்பட்டது
நேற்று இரவு 12 மணிவரை கடைசிவரை சட்டப் போராட்டம் நடத்திய குற்றவாளிகளின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து இன்று தூக்கு தண்டனையை அவர்களுக்கு நிறைவேற்றப்பட்டது
இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டதை அறிந்ததும் நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி அவர்கள் கையை தட்டி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும் இதுகுறித்து அவர் கூறியபோது ’நிர்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளது, எனது மகளுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்துள்ளது என்று கூறினார்
மேலும் இந்திய நீதித்துறைக்கும் அரசுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் அவர் தெரிவித்ததோடு, நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே எங்களுக்கு நீதி கிடைத்திருப்பதாகவும் இந்தியாவின் மகள்களுக்கு எங்களது நீதிக்கான வெற்றியை சமர்ப்பிக்கின்றோம் என்றும் இந்தியாவின் மகள்களுக்கான எனது போராட்டம் மீண்டும் தொடரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
குற்றவாளிகள் தூக்கிலிடப்பட பின்னரே நான் சந்தோஷம் அடைவேன் என்றும், அதுவரை எனக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் நிர்பயாவின் தாயார் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் இன்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து தனது முழு மகிழ்ச்சியையும் அவர் பத்திரிக்கையாளர்கள் முன் வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது