Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யார் இந்த பவன் ஜல்லாட்? தூக்கில் போட இவருக்கு ரூ.80,000 சம்பளமா..?

யார் இந்த பவன் ஜல்லாட்? தூக்கில் போட இவருக்கு ரூ.80,000 சம்பளமா..?
, வெள்ளி, 20 மார்ச் 2020 (10:41 IST)
இன்று காலை நிர்பயா வழக்கில் குற்றாவாளிகள் தூக்கில் போட தூக்கிலடும் ஊழியருக்கு ரூ.80,000 சம்பளம் வழங்கப்பட்டதாம். 
 
டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நால்வருக்கும் இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. குற்றவாளிகள் நால்வரும் சாகும் வரை தூக்கில் இடப்பட்டதாகவும் அவர்களது மரணம் உறுதி செய்யப்பட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
 
தூக்கில் போடுவது 3 முறை தள்ளிப்போய் இன்று நிறைவேற்றப்பட்டது. இதனை அனைவரும் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் நால்வரையும் தூக்கில் போட தூக்கிலிடும் ஊழியருக்கு ரூ.80,000 சம்பளம் வழங்கப்பட்டதாம். ஆம், உத்தர்பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த பவன் ஜல்லாட் என்பவர் தான் இவர்களை தூக்கில் போட்டார். 
 
பவன் முன்னதாகவே திஹார் சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துவரப்பட்டு தனி அறையில் தங்கவைக்கப்பட்டிருந்தார். இன்று அதிகாலை 3.30 மணிக்கே தயாரான பவனிடம் 8 கயிறுகள் கொடுக்கப்பட்டு அதில் நான்கை இவர் தேர்வு செய்தார். பின்னர் சரியாக தூக்கில் இட்டார். இவருக்கு ஒரு நபருக்கு தலா ரூ.20,000 என மொத்தம் ரூ.80,000 சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
 
மேலும், பவனுக்கு மனநல ஆலோசனை வழங்கவும் சிறை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒழுங்காக 20 வினாடி கையை கழுவுங்க! – டூடுல் வெளியிட்ட கூகிள்!