நடிகர் சிவக்குமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்தி வீரன் திரைப்படத்தின் அறிமுகமனார். பின்னர், பையா, மெட்ராஸ், கைதி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தற்போது சுல்தான், பொன்னியில் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது மனைவி ரஞ்சனி கார்த்திக்கு இரண்டாவது குழந்தை பிறந்திருப்பதாகக் கூறினார்.
இந்நிலையில் இக்குழந்தைக்கு பெயர் வைத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், கண்ணா,
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா. எனத் தெரிவித்துள்ளார்