Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

லியோ படத்தில் கமல்ஹாசன்? … ஆனால் நடிகராக இல்லை- எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்!

லியோ படத்தில் கமல்ஹாசன்? … ஆனால் நடிகராக இல்லை- எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்!
, வெள்ளி, 29 செப்டம்பர் 2023 (07:30 IST)
இந்த ஆண்டில் மிகவும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமாக அமைந்துள்ளது விஜய் நடித்துள்ள லியோ. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, லலித்குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா என ஏகப்பட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.  படத்தின் ரன்னிங் டைம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படம் 2 மணிநேரம் 39 நிமிடங்கள் ஓடும் என சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் திடீரென்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்போது படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசன் லியோ படத்துக்காக சில காட்சிகளுக்கான வசனங்களை டப்பிங் செய்து கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் பொன்னியின் செல்வன் போல லியோ படத்திலும் கமல்ஹாசன் குரல் கதையை விவரிக்கும் குரலாக அமையும் என சொல்லப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

“மகாநதியை விட எனக்கு சித்தா படம் பிடித்திருக்கிறது..” – கமல்ஹாசன் பாராட்டு!