Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதல்வரைப் பாராட்டிய நடிகர் கமல்ஹாசன் !!

முதல்வரைப் பாராட்டிய நடிகர் கமல்ஹாசன் !!
, சனி, 6 பிப்ரவரி 2021 (13:49 IST)
மின்சார வாகனங்களுக்குச் சாலை வரியும், பதிவுக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளதற்கு நடிகர் கமல்ஹாசன் பாராட்டியுள்ளார்.
 

இருபத்தியோராம் நூற்றாண்டில் உலகம் நவீனமயமாகிவிட்டது. எனவே மனிதர்கள் தொழில்நுட்பங்களுக்கு தங்களை மாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் பெட்ரோல் வாகனங்களில் இருந்து மக்கள் மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர்.ArvindKejriwal
 
டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பெட்ரோல் வாகனங்களுக்குப் பதில், மின்சார வாகங்களை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது  பேசிய அவர்,வரும் 2024 ஆம் ஆண்டு புது வாகனங்களின் 25% விழுக்காடு மின்சார வாகனங்களாகத்தான் இருக்கும் எனத் தெரிவித்தார்.

மேலும், மின்சார வாகனங்களுக்கு சாலை வரியும், பதிவுக் கட்டணமும் விதிக்கப்பட மாட்டாது எனவும், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு சுமார் 30 ஆயிரமும் நான்கு சக்கர வாகனங்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் மானியமாக அரசுசார்பில் வழங்கப்படும் எனக் கூறினார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன்  கூறியுள்ளதாவது :

அதில், மக்களுக்கான திட்டங்களை வெறும் பேச்சிலும் பேப்பரிலும் மட்டும் இருக்காமல் சொன்னதைச் செய்துவரும் உங்களுக்குப் பாராட்டுகள். என் நெருங்கிய நண்பரும் மதிப்பிற்குரிய டெல்லி முதல்வருமான கெஜ்ரிவால் அங்குள்ள அரசு வாகனங்களை இன்னும் 6 மாதங்களில் மின்சார வாகனங்களாக ஆக்கப்படும் எனக் கூறியுள்ளார்.  அவர் முதல் முதலாக இந்த முடிவை மாசுபடுதலைக் கட்டுப்படுத்த எடுத்துள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கமல் படத்தில் நடிக்க பல கண்டீஷன்கள் போட்ட குணச்சித்திர நடிகர்!