Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கே.ஜி.எஃப் பட இயக்குநரின் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன்...முதல்நாள் ஷுட்டிங் வைரல் போட்டோ

கே.ஜி.எஃப் பட இயக்குநரின் அடுத்த படத்தில் ஸ்ருதிஹாசன்...முதல்நாள் ஷுட்டிங் வைரல் போட்டோ
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (22:38 IST)
சூர்யா நடித்த ஏழாம் அறிவு படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் கமல்ஹாசனின் மகளாக இருந்தாலும் தன் சொந்த முயற்சியில் இன்று தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாகியுள்ளார்.

தற்போது ஸ்ருதி ஹாசன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை எஸ்.பி.ஜனநாதன் இயக்கி வருகிறார். ஷூட்டிங் முடிவடைந்த நிலையில் இப்படம் விரையில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இன்று தனது 35 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஸ்ருதிஹாசன் தனது காதலருடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடினார்.

இந்நிலையில் கே.ஜி.எஃப் பட இயக்குநர்  பிரசாந்த் நீல் இயக்கவுள்ள அடுத்த படமான சலார் படத்தில் ஸ்ருதி ஹசன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், இன்று சலார் படத்தில் நடித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.

மேலும், இப்படத்தை அதிவேகமாக இரண்டு மாதங்களில் முடிக்க இயக்குநர் பிரசாந்த் நீல் திட்டமிட்டுள்ள நிலையில், இன்று முதல் நாள் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஸ்ருதிஹாசன்.

இப்படத்தில் பிரபாஸுடன் முதன்முதலாக ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டாக்டர் படம் குறித்து சிவகார்த்திகேயன் முக்கிய அப்டேட் !