Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ம.நீ,மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் தோல்வி !

ம.நீ,மய்யம் கட்சி தலைவர் நடிகர்  கமல்ஹாசன் தோல்வி !
, ஞாயிறு, 2 மே 2021 (21:23 IST)
இந்தியா முழுவதிலும் தமிழகம, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இன்று ஓட்டுஎண்ணிக்கை நடைபெற்றது.

இதில், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.

இந்நிலையில்,நடிகர் கமல்ஹாசனின்  மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் ஐஜேகே கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது.

இதில், கமல்ஹாசன் கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் வானதி ஸ்ரீனிவாசன் போட்டியிட்டார். இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் முதன்முதலாக சட்டசபைத்தேர்தலில் போட்டியிட்டு 1500 வாக்குகள் வித்தியாசத்தில் வானதி ஸ்ரீனிவாசனிடம் தோல்வி அடைந்துள்ளார்.

இதனால் அவரது கட்சித்தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

விஜயகாந்த், மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் முதன்முதலில் சட்டசபைத்தேர்த்லில் போட்டியிட்டு வென்றது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திரைத்துறைக்கும் ஆக்ஸிஜன் கிடைக்கட்டும்… ஸ்டாலினுக்கு வாழ்த்து சொன்ன விஷால்!