Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

20 Years of Dhanush: “கனவில் கூட நினைக்கவில்லை”… தனுஷ் வெளியிட்ட நெகிழ்ச்சி கடிதம்!

Advertiesment
20 Years of Dhanush: “கனவில் கூட நினைக்கவில்லை”… தனுஷ் வெளியிட்ட நெகிழ்ச்சி கடிதம்!
, புதன், 11 மே 2022 (10:53 IST)
நடிகர் தனுஷ் சினிமாவில் 20 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

தனுஷ் தனது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் உருவான துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அதையடுத்து பல வெற்றிப் படங்களைக் கொடுத்து இன்று ஹாலிவுட் படம் வரை சென்றுள்ளார். இரண்டு முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என தற்போது பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து துள்ளுவதோ இளமை திரைப்படம் ரிலீஸாகி தற்போது 20 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் ரசிகர்களும் சகக் கலைஞர்களும் நடிகர் தனுஷுக்கு வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.
webdunia

 
இதையடுத்து தனுஷ் நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில் “நான் சினிமா துறைக்கு வந்து 20 ஆண்டுகள் கடந்துவிட்டன என்று என்னால் நம்ம முடியவில்லை .நேரம் சீக்கிரம் கடந்துவிட்டது. நான் 'துள்ளுவதோ இளமை' படம் தொடங்கும் போது இந்த இடத்திற்கு வருவேன் என்று கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. கடவுள் கருணை உள்ளவர். என் ரசிகர்களின் தொடர் ஆதரவு மற்றும் அன்பிற்கு நன்றி சொன்னால் போதாது. அவர்கள் தான் என் மிக பெரிய பலமே. பத்திரிக்கை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் அனைவருக்கும் என் பணிவான நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். 

webdunia


இந்த தருணத்தில் நான் பணியாற்றிய பணியாற்றிக் கொண்டிருக்கிற தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், துணை நடிகர்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகிய அனைவருக்கும் நன்றி. என்னுடைய குரு என் அண்ணன் செல்வராகவனுக்கு நன்றி. ஏன் என்று உங்களுக்கு தெரியும்.எனக்குள் ஒரு நடிகன் இருக்கிறான் எனக் கண்டுபிடித்த எனது அப்பா கஸ்தூரி ராஜா அவர்களுக்கு நன்றி. இறுதியாக எனது அம்மா, தினமும் அவர் செய்யும் பிரார்த்தனை தான் என்னை பாதுகாத்து இந்த இடத்தில என்னை கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறது. அம்மா இல்லாமல் நான் ஒண்ணுமே இல்லை. வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். எண்ணம் போல் வாழ்க்கை. அன்பை பகிருங்கள். ஓம் நமசிவாய” என நெகிழ்ச்சியோடு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கார்த்தியின் அடுத்த படத்தில் இணைந்த ’பொன்னியின் செல்வன்’ கலைஞர்… லேட்டஸ்ட் தகவல்