Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிரபல நடிகரிடம் செல்போன் பறிப்பு… போலீஸ் விசாரணை!

Advertiesment
பிரபல நடிகரிடம் செல்போன் பறிப்பு… போலீஸ் விசாரணை!
, சனி, 19 நவம்பர் 2022 (16:18 IST)
தமிழ் சினிமாவில் நாடகப் பின்னணியில் இருந்து வந்து சாதித்தவர்களில் இளன்கோ குமரவேலும் ஒருவர்.

ராதா மோகன் இயக்கிய பெரும்பாலான படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் குமரவேல். இவர் பொன்னியின் செல்வன் நாவலை மேடை நாடகமாக்கி கவனிக்க வைத்தவர்.இதையடுத்து சமீபத்தில் வெளியாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தை திரைக்கதையை இயக்குனர் மணிரத்னம் மற்றும் ஜெயமோகனோடு இணைந்து நடிகர் குமரவேலும் எழுதி இருந்தார்.

இந்நிலையில் இவர் இப்போது போலிஸில் தனது செல்போனை மர்ம நபர்கள் பறித்து சென்று விட்டதாக புகார் அளித்துள்ளார். நேற்றிரவு வேலை முடிந்து வீடு திரும்பிய போது இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள் செல்போனை திருடிவிட்டு சென்றுவிட்டதாகப் புகார் அளித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர்களுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்…. பிரியங்கா சோப்ரா கேள்வி!