Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் நடிகர் பாபிசிம்ஹா கார் விபத்து. ஒரு பெண் உள்பட 3 பேர் படுகாயம்..

Mahendran
சனி, 19 ஏப்ரல் 2025 (12:52 IST)
சென்னை கிண்டி பகுதியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில், நடிகர் பாபி சிம்ஹாவின் சொந்த காரை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததால் பெரிய விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மூன்று பேர், அதில் ஒரு பெண் உள்பட, காயமடைந்துள்ளனர். மேலும், ஆறிற்கும் அதிகமான வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
 
முன்னதாக, பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, ஓட்டுநர் புஷ்பராஜ் காரை கட்டுப்பாட்டிழந்து ஓட்டியதால் விபத்து நடந்தது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
 
இந்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, பாபி சிம்ஹாவின் காரை பறிமுதல் செய்தனர். புஷ்பராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். விபத்து தொடர்பாக அவரிடம் கிண்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்தச் சம்பவம் திரையுலகத்திலும், பொதுமக்களிடையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
Edited by Mahendran
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

இன்னும் எத்தனை திருமணம் செய்வார் கமல்ஹாசன்.. அவரே அளித்த பதில்..!

பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் அப்பாஸ்!

சூரி நடிக்கும் ‘மண்டாடி’.. வித்தியாசமான தலைப்பின் அர்த்தம் இதுதானா?

கார்த்தி & சுந்தர் சி படத்தில் நயன்தாராதான் கதாநாயகியா?... வெளியான தகவல்!

மணிரத்னத்துக்கு நான் வைத்த பட்டப்பெயர் இதுதான்… கமல்ஹாசன் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments