Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

’மாஸ்டர்’ உண்மையிலேயே லாபப்படமா?

’மாஸ்டர்’ உண்மையிலேயே லாபப்படமா?
, திங்கள், 1 பிப்ரவரி 2021 (21:47 IST)
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் இரண்டே வாரங்களில் ரூபாய் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் ஓடிடியில் விற்பனை செய்ததன் மூலம் 40 கோடிக்கு மேல் லாபம் கிடைத்ததாகவும் அதுமட்டுமின்றி ஓடிடியில் ரிலீஸ் ஆன பின்னரும் திரையரங்குகளில் சுமார் 70 சதவீத பார்வையாளர்களுடன் ஓடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன
 
மேலும் யூ ட்யூப் வைத்திருக்கும் ஒரு சிலர் வேண்டுமென்றே இந்த படத்தின் வசூல் குறித்து அதிகமாக கூறுவது மட்டுமின்றி விஜய் தரப்பினர் கொடுத்த பணத்திற்கு வஞ்சகம் இல்லாமல் தங்கள் இஷ்டத்துக்கு வசூல் நிலவரங்களை அள்ளித்தெளித்து வருவதாக கூறப்படுகிறது 
 
உண்மையில் ’மாஸ்டர்’ திரைப்படம் முதல் 5 நாட்கள் மட்டுமே அரங்கு நிறைந்து நல்ல வசூலை கொடுத்தது என்பதும் அதன் பின்னர் வசூல் படுவீழ்ச்சி அடைந்தது என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன 
 
குறிப்பாக சென்னை தேவி தியேட்டரில் ஒரு சில காட்சிகள் கூட்டம் வராததால் ரத்து செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்றுவரை தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் 70% திரையரங்குகளில் பார்வையாளர்கள் இருப்பதாக கூசாமல் பொய் சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் நாளைய பகல் காட்சிக்கு சென்னையில் உள்ள முக்கிய திரையரங்குகளில் இன்னும் ஒரு டிக்கெட் கூட விற்பனை ஆகவில்லை என்பதுதான் உண்மையான நிலவரம் ஆக உள்ளது. இதிலிருந்தே இந்த திரைப்படம் லாபமா அல்லது நஷ்டமா என்பதை புரிந்து கொள்ளலாம்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஏப்ரல் 14ல் விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’ ரிலீஸா?