Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயக்குனர் சேரன் வீட்டில் நடந்த துக்க நிகழ்வு: திரையுலகினர் இரங்கல்..!

இயக்குனர் சேரன் வீட்டில் நடந்த துக்க நிகழ்வு: திரையுலகினர் இரங்கல்..!
, வியாழன், 16 நவம்பர் 2023 (10:55 IST)
இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் தந்தை காலமானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் அவரது மறைவுக்கு இரங்கல் கூறி வருகின்றனர்.

தமிழ் திரை உலகின் நடிகர் மற்றும் இயக்குனராக இருந்து வருபவர் சேரன். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் உருவான தமிழ் குடிமகன் என்ற திரைப்படம் வெளியானது. இந்த நிலையில் நடிகர் சேரனின் தந்தை எஸ் பாண்டியன் என்பவர் பழையூர்பட்டி என்ற அவரது சொந்த கிராமத்தில் இன்று காலமானார். அவருக்கு வயது 84.

சேரனின் தந்தை வயது மூப்பு காரணமாக காலமானதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் சேரன் தனது குடும்பத்துடன் தனது தந்தையின் இறுதி சடங்கை செய்வதற்காக பழையூர்பட்டி சென்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்த சேரனின் தந்தை பாண்டியன் அவர்கள் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு பழையூர் பட்டியில் உள்ள அவரது வீட்டில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சேரனின் தந்தை மறைவிற்கு  திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்


Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ட்ரோல் செய்தவர்களுக்கும் நன்றி… 10 ஆண்டுகளை நிறைவு செய்த மகிழ்ச்சியில் கீர்த்தி சுரேஷ்!